நாகப்பட்டினம், மே 9: நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுத்தவர் இந்தியில் பேசிய போது தமிழில் பேசும்படி எஸ்பி ஹர்ஷ்சிங் கூறினார். இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் வியப்படைந்தனர். நாகப்பட்டினம் மாவட்ட காவல்கண்காணிப்பு அலுவலகத்தில் எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் 19 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எஸ்பி கூறினார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற எஸ்பி ஹர்ஷ்சிங் சம்பவம் குறித்து மனுதாரரிடம் விசாரணை செய்தார்.
அப்போது ஒரு மனுதாரர் திடீரென இந்தியில் தனது குறையை தெரிவித்தார். அப்போது எஸ்பி எனக்கு தமிழ் நன்றாக தெரியும். எனவே உங்களது குறையை தமிழில் தெரிவிக்கலாம் என்று கூறினார். பெரும்பாலும் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசினால் தான் புரிந்து கொள்வார்கள். ஆனால் நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி தமிழில் பேசும்படி கூறியதை கேட்டு பொதுமக்கள் வியப்படைந்தனர்.
The post மாணவர்களின் உயர்கல்வி கனவிற்கு பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனுதாரரிடம் தமிழில் பேசும்படி கூறிய நாகை எஸ்பி பொதுமக்கள் ஆச்சரியம் appeared first on Dinakaran.