- சீனிவாசன் நர்சிங் கல்லூரி
- பெரம்பலூர்
- சீனிவாசன் செவிலியர் கல்லூரி
- எஸ்ஆர்எம் நர்சிங் கல்லூரி
- திருச்சி
- உலக செவிலியர் தினம்
பெரம்பலூர், மே9: பெரம்பலூர் சீனிவாசன் செவிலியர் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் திருச்சி எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரியில் உலக செவிலியர் தினத்தை ஒட்டி நேற்று செவிலியர் கல்லூரிகளுக் கிடையேயான நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர் . இதில் கால் பந்து, த்ரோ பால், செஸ், கேரம், பென்சில் வரைதல், மெஹந்தி, குழு நடனம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. சீனிவாசன் செவிலியர் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசினை வென்றுள்ளனர். இதில் மொத்தமாக 14 செவிலியர் கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டிகளில் சீனிவாசன் செவிலியர் கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள், மிதுன் மற்றும் கார்த்திக் கேரம் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளனர்.
செஸ் போட்டியில் இரண்டாம் ஆண்டு பயிலும் புகழ்மணி என்ற மாணவன் முதல் பரிசை வென்றார். கால் பந்து விளையாட்டில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சத்யா நாராயணன், சத்யா பிரகாஸ், சம்யுக்த், கோகுலரசன், சரத், இப்ராகிம் சாஹிப் &அபி அந்தரியா ஆகியோர்கள் முதல் பரிசினை தட்டிச்சென்றனர். இப்போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்ற மாணவர்களை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் வேந்தர் சீனிவாசன் பதக்கம், மற்றும் பாராட்டு சான்றிதழ்களுடன் வாழ்த்தினார். அவர்களுடன் கல்லூரி முதல்வர் தனலட்சுமி மற்றும் பேராசிரியர்களும் கலந்துக்கொண்டனர்
The post சீனிவாசன் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் சாதனை appeared first on Dinakaran.