- தஞ்சாவூர் மாவட்டம்
- தஞ்சாவூர் மாவட்ட சட்ட விவகாரங்கள் ஆண
- தஞ்சாவூர்
- தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம்
- தஞ்சாவூர் மாவட்ட சட்ட ஆணைக்குழு
- மாவட்ட சட்ட ஆணைக்குழு
- கும்பகோணம் பட்டுக்கோட்டை
- ஒரத்தநாடு
- Babanasam
- தஞ்சாவூர் மாவட்ட சட்ட ஆணையம்
தஞ்சாவூர், மே9:தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்திற்கு புதிதாக 50 சட்ட தன்னார்வல தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், திருவையாறு, பேராவூரணி மற்றும் திருவிடைமருதூர் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்திற்கு நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இல்லை. (18 வயதிற்கு மேற்பட்டவர்களாக மட்டும் இருக்க வேண்டும்) கல்லூரி மாணவ மாணவியர்கள், ஓய்வு பெற்ற அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் சட்ட தன்னார்வல தொண்டருக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவத்தை Thanjavur E-court website-ல் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து வரும் 20.05.2024 தேதி மாலை 5 மணிக்குள் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தஞ்சாவூர் என்று முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 20ம் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி சட்டத்தன்னார்வல தொண்டர்கள் பணியானது சட்ட சேவை மட்டுமே. உத்தியோகம் இல்லை மற்றும் தற்காலிகமானது. மேலும் சட்டத் தன்னார்வல தொண்டர் பணிக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படமாட்டாது. சேவைக்கு ஏற்ப மதிப்பூதியம் மட்டுமே அளிக்கப்படும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு 50 சட்ட தன்னார்வல தொண்டர்கள் தேர்வு appeared first on Dinakaran.