×

அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட பணிமனை அலுவலகங்கள் இடமாற்றம்

சென்னை, மே 9: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட 100 மற்றும் 101வது பணிமனை அலுவலகங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கீழ்க்கண்ட புதிய முகவரியில் செயல்படும். அதன்படி, பணிமனை எண் 100, எண்.16, பிரான்சன் கார்டன் சாலை, கீழ்ப்பாக்கம் என்ற முகவரியிலிருந்து கதவு எண்.4/1, கோயில் தெரு, கீழ்ப்பாக்கம், இந்த முகவரிக்கு மாற்றப்படுகிறது. அதேபோல் பணிமனை எண் 101, கதவு எண்.4/1, கோயில் தெரு, கீழ்ப்பாக்கம் என்ற முகவரியிலிருந்து புதிய ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம், (கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரில்) இங்கு மாற்றப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் மற்றும் குடிநீர் வரி / கட்டணம் செலுத்தவும் மேற்கண்ட புதிய முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்: பகுதிப் பொறியாளர் 8144930908, துணை பகுதிப் பொறியாளர் 8144930222, துணை பகுதிப் பொறியாளர் 8144930223.

The post அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட பணிமனை அலுவலகங்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Anna Nagar Zone ,Chennai ,Chennai Drinking Water Board ,Branson Garden ,Dinakaran ,
× RELATED பிரதான உந்து குழாயில் இணைப்பு பணி 5...