×

மறைமலைநகரில் பைக் திருடிய மர்ம நபருக்கு போலீசார் வலை

செங்கல்பட்டு, மே 9: மறைமலைநகரில் பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் ஜோனா பவுல்ராஜ்(24), தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவர் பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர், காலையில் வந்து பார்த்தபோது பைக் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கம் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் ஜோனா பவுல்ராஜ் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post மறைமலைநகரில் பைக் திருடிய மர்ம நபருக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Kiramalai Nagar ,Chengalpattu ,Karamalayanagar ,Jonah Paulraj ,Kiyakaranai ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ரயில்வே மேம்பால பாதையை...