×

தனியார் லாட்ஜில் இறந்து கிடந்த எல்ஐசி ஏஜெண்ட்

சிதம்பரம், மே 9:காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள உடையார்குடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(55). இவர் எல்.ஐ.சி ஏஜெண்டாக பணி புரிந்து வந்தார். இவர் சிதம்பரம் வி.ஜி.பி தெரு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த ஆறு மாதமாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். தினந்தோறும் அவர் காலை 6 மணி அளவில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். ஆனால் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகமடைந்த விடுதியின் உரிமையாளர், சிதம்பரம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கழிவறையில் ஆனந்த் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் லாட்ஜில் இறந்து கிடந்த எல்ஐசி ஏஜெண்ட் appeared first on Dinakaran.

Tags : LIC ,Chidambaram ,Anand ,Wodiargudi ,Kattumannarkovil ,VGP Street ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு;...