×

பஸ் விபத்தில் 9 பேர் காயம்

மானாமதுரை, மே 9: மதுரையில் இருந்து பரமக்குடி நோக்கி அரசு பஸ் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பசலை கிராமம் அருகே சென்ற ேபாது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த ஜேசிபி வாகனத்தில் மோதி அருகில் இருந்த தடுப்பு மீது பேருந்து மோதி நின்றது.இதில் முன்பக்கம் பயணித்த மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்த தாமஸ்(43), அவரது மனைவி முத்துமணி(39), வேலங்குடியை சேர்ந்த ராணி(26) உள்ளிட்ட9 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பஸ் விபத்தில் 9 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Madurai ,Paramakudi ,JCP ,Melappasalai ,Manamadurai panchayat ,Dinakaran ,
× RELATED 15 வயது மகள் காதல் கண்டித்த தந்தை கொலை: காதலன், நண்பர் கைது