×

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு

புதுடெல்லி: புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 3ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம்,” இது மக்களவை தேர்தல் நேரம் என்பதால் இந்த விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏன் இடைக்கால ஜாமீன் வழங்க கூடாது’’ என்று கேள்வி எழுப்பி எழுப்பி இருந்தது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி சட்டம் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ,‘‘நாளை (இன்று) டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தொடர்பான வழக்கு உள்ளது’’ என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ‘அந்த வழக்கில் வெள்ளிக்கிழமை வாதங்களோடு சேர்ந்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதால், ஜி.எஸ்.டி சட்டம் தொடர்பான வாதங்களை நாளை (இன்று) நீங்கள் தொடரலாம்’’ எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

The post டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Delhi ,Supreme Court ,New Delhi ,Chief Minister ,Gejriwal ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி...