×
Saravana Stores

49 தொகுதிகளில் நடக்க உள்ள 5ம் கட்ட தேர்தலில் 695 வேட்பாளர்கள்: மே 20ல் வாக்குப்பதிவு

புதுடெல்லி: வரும் 20ம் தேதி 49 தொகுதிகளில் நடக்க உள்ள 5ம் கட்ட மக்களவை தேர்தலில் 695 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. இதில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், வரும் 20ம் தேதி 5ம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘5ம் கட்ட தேர்தலில் 1,586 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அதில், பரிசீலனைக்குப் பின் 749 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சிலர் வாபஸ் பெற்ற நிலையில், இறுதியாக 695 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர் ’ என கூறப்பட்டுள்ளது.

The post 49 தொகுதிகளில் நடக்க உள்ள 5ம் கட்ட தேர்தலில் 695 வேட்பாளர்கள்: மே 20ல் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Dinakaran ,
× RELATED முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட்...