×
Saravana Stores

எடப்பாடிக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

சென்னை: கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் அவரை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது உட்பட அனைத்து நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கை முன்னதாக விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி ஆறு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது வரையில் எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் மேற்கண்ட மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சச்சின் தத்தா விடுப்பில் சென்று விட்டதால் வழக்கு வரும் அக்டோபர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post எடப்பாடிக்கு எதிரான மனு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Chennai ,Edappadi Palaniswami ,General Secretary ,AIADMK ,Election Commission of India ,
× RELATED அதிமுக வாக்குகளை எந்த சூழலிலும்...