சென்னை: மின்கம்பங்களை வேகத்தடைகளுக்கு அருகில் அமைக்காமல் சற்றுத் தள்ளி பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மின் பகிர்மான இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கை: கடந்த 6ம் தேதி எரிசக்தி செயலாளர் எழுதிய கடித்தில், ‘வேகத்தடையில் ஏறியதால் விபரீதம், மின்கம்பத்தில் பைக் மோதியதில் மகன்கள் கண் முன் தந்தை பலி’ என்ற செய்தி குறித்து வருங்காலத்தில் மின்கம்பத்தில் வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பின்வரும் அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அலுவவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இனி வரும் காலங்களில் சாலைகளின் ஓரம் அமைக்கப்படும் மின் கம்பங்களை வேகத்தடைகளுக்கு அருகில் அமைக்காமல் சற்று தள்ளி பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும்.
மேலும் பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றி, புதிய மின் கம்பம் பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும். அகற்றப்பட்ட பழைய மின்கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். வேகத்தடை இருக்கும் இடத்திற்கு அருகில் மின்கம்பங்கள் இருந்தால் பாதுகாப்பான தூரத்திற்கு தள்ளிப்போட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைஅனைத்து பிரிவு அலுவலர்களும் தவறாது பின்பற்ற அறிவுரை வழங்குமாறு மண்டல தலைமைப் பொறியாளர்கள், மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The post மின்கம்பங்களை வேகத்தடைக்கு அருகில் அமைக்கக்கூடாது: மின் வாரியம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.