×
Saravana Stores

கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிக்கு அனுமதி வழங்க தடை கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு


சென்னை: கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கல்வி நிறுவனங்களில் கல்வி சாராத கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தக் கூடாது எனவும், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், திருச்சி மற்றும் வேலூரில் உள்ள தனியார் பள்ளிகளில் கண்காட்சி நடத்தப்பட்டதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்த பரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், இந்த கண்காட்சிகளால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவையும், அரசு உத்தரவையும் பின்பற்றவில்லை. எனவே, கல்வி நிறுவன வளாகங்களில் வணிக ரீதியிலான கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு நேற்று விசாரித்து, 4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

The post கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிக்கு அனுமதி வழங்க தடை கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt ,Chennai ,Madras High Court ,Dinakaran ,
× RELATED குரங்குக் குட்டியை பார்வையிட மருத்துவருக்கு அனுமதி: ஐகோர்ட்