- சென்னையில் உலக பத்திரிகை தினம்
- சென்னை
- உலக பத்திரிகை சுதந்திர தினம்
- நிறுவனம்
- of
- இந்தியா
- தரமணி, சென்னை
- அமெரிக்க தூதரகம்
- பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா
- உலக பத்திரிகை தினம்
சென்னை: சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா வளாகத்தில் உலக பத்திரிகை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை அமெரிக்க துணை தூதரகம் மற்றும் பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா சார்பாக ‘பேனி லவ் ஹமர்ஸ் அமெரிக்கா’ என்ற கருத்து சுதந்திரம் குறித்து பேசும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் திரைப்படம் உணர்த்தும் விஷயங்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சென்னை அமெரிக்கா துணை தூதரகத்தின் செய்தி பிரிவு அதிகாரி சமந்தா ஜாக்சன் மற்றும் பத்திரிகை துறையை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் அமெரிக்க துணை தூதரகத்தின் செய்தி பிரிவு அதிகாரி சமந்தா ஜாக்சன் நிருபர்களிடம் கூறுகையில், பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவில் கருத்து சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இன்று திரையிடப்பட்ட ‘பேனி லவ் ஹமர்ஸ் அமெரிக்கா’ என்ற ஆவணப்படமும் இதை தான் வலியுறுத்துகிறது என்றார்.
The post சென்னையில் உலக பத்திரிகை தினவிழா: பத்திரிகை சுதந்திரம் வலியுறுத்தும் ஆவணப்படம் வெளியீடு appeared first on Dinakaran.