- சாம் பிட்ரோடா
- காங்கிரஸ் கட்சி
- வாழ்க்கை பிரிவு
- தில்லி
- சாம் பிட்ரோடா
- காங்கிரஸ் கட்சி நேரடி வெளிநாட்டு பிரிவு
- சாம் பிட்ரோடா
- மல்லிகார்ஜுனா கட்கே
- பிரிவு
- தின மலர்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா ராஜினாமா செய்தார். சாம்பிட்ரோடா பேசியவை அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளான நிலையில் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக எழுதிய கடிதத்தை கட்சி தலைவர் மல்லிகார்ஜுன காட்கேவுக்கு அனுப்பினார். சாம் பிட்ரோடாவின் ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடனடியாக ஏற்றார்.
காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா பதவி வகித்திருந்தார். இவர், சமீபத்தில் இந்தியாவின் பன்மைத்துவம் குறித்தும், இந்தியர்கள் குறித்தும் பேசியிருந்தார்.
அப்போது பேசியதாவது:
கிழக்கில் மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் அரேபியர்களைப் போலவும், தெற்கில் ஆப்பிரிக்கர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் அங்கும் இங்கும் சில சண்டைகளை தவிர, மக்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழல்தான் 75 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்தது.இந்திய மக்கள் பல்வேறு மொழிகள், மதங்கள், உணவு, பழக்கவழக்கங்களை மதிக்கிறார்கள் “அதுதான் நான் நம்பும் இந்தியா, இங்கு அனைவருக்கும் ஒரு இடம் இருக்கிறது, எல்லோரும் கொஞ்சம் சமரசம் செய்து கொள்கிறார்கள்” என்று பிட்ரோடா கூறினார்.
The post காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் சாம் பிட்ரோடா appeared first on Dinakaran.