- பூக்குழி
- திருச்சுழி கோவில் திருவிழா
- திருச்சுழி
- விருதுநகர் மாவட்டம்
- அக்னி வீரபத்திரர்
- உச்சினிமாகாளி
- களரி
- களரி திருவிழா
திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அக்னி வீரபத்திரர், உச்சினிமாகாளி கோயில் உள்ளது. இக்கோயிலில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை களரி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2018ம் ஆண்டிற்கு பிறகு இந்த வருடம் தான் களரி திருவிழா நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி 48 நாள் கடுமையான விரதம் இருந்து வந்தனர். இத்திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாள் குண்டாற்றிலிருந்து பக்தர்கள் கரகம் எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக அம்மாவசையை முன்னிட்டு சைவ சுவாமிகளுக்கு முக்கனி பூஜை நடைபெற்றது.
இன்று இறுதிநாள் நிகழ்ச்சியாக மதுரைவீரன் சாமியாடி ஆணி பாதரக்சை அணிந்து அருள்வாக்கு கூறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இத்திருவிழாவில் சென்னை, கோவை, திருப்பூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். பின்னர் சுவாமியை தரிசித்து சென்றனர்.
The post திருச்சுழி கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள் appeared first on Dinakaran.