லக்னோ: இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதே என்னுடைய கணிப்பு என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எங்கள் தேர்தல் அறிக்கை, வேலை, இளைஞர்கள், பெண்கள், பணவீக்கம், நாட்டின் செல்வத்தை திரும்ப பெறுவதற்கு என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி மட்டுமே பேசுவதால், பிரதமர் மோடிக்கு எங்களது அறிக்கை பிடிக்கவில்லை. அதனால் தான், பிரதமர் எங்களின் தேர்தல் அறிக்கையை ஆரம்பத்தில் இருந்து தாக்கி வருகிறார்.
தேர்தலின் உண்மையான பிரச்சினைகள் என்ன? வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பெண்கள் ஒடுக்குமுறை, மக்கள் போராட்டம், விவசாயிகள் பிரச்னைகள், இவைதான் தேர்தல் நடத்தப்பட வேண்டிய பிரச்னைகள் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பிரியங்கா காந்தி பேசுகையில், இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதே என்னுடைய கணிப்பு. பாஜகவினரின் பொய் பரப்புரைகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்பதை உணரமுடிகிறது. அரசியல் கூட்டம், தொலைக்காட்சி விவாதங்களில் மக்களுடைய பிரச்சனைகளை பேசவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
வேலையின்மை, விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு மோடி அரசு என்ன செய்தது என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர் என்றார். இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் சர்ச்சைக்குரிய “கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போலவும், தெற்கில், ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள்…” என்ற கருத்துக்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா, இந்த பயனற்ற பிரச்சினைகளில் பிரதமர் மோடி முழு டாஸ் விளையாடுகிறார். வேலைவாய்ப்பு, பணவீக்கம் மற்றும் பெண்கள் மீதான அட்டூழியங்கள் ஆகியவற்றில் முழு டாஸ் விளையாட நான் அவருக்கு சவால் விடுகிறேன் என்றார்.
The post இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; பாஜகவின் பொய் பேச்சால் சோர்ந்து போயுள்ளனர்: பிரியங்கா காந்தி பேட்டி appeared first on Dinakaran.