- தமிழ்
- தமிழ்நாடு
- ரங்கசாமி
- புதுச்சேரி முதலமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- Soundararajan
- முதலமைச்சர்
- புதுச்சேரி
- ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சராக 4ம் ஆண்டு மக்கள் பணிகளை தொடங்கிய ரங்கசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தியில்,
புதுச்சேரி முதலமைச்சராக மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து நான்காம் ஆண்டு மக்கள் பணிகளை தொடங்கிய அண்ணன் திரு. ரங்கசாமி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி புதுச்சேரி அரசிற்கு துணை நின்ற முறையில் அண்ணன் திரு. ரங்கசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில், புதுச்சேரி அரசாங்கத்தின் மூன்று ஆண்டு சாதுனைகளை நினைவு கூறுகிறேன்.
* தமிழகத்தைக் காட்டிலும் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை இன்றளவும் குறைவாகத்தான் உள்ளது.
* மூன்று முறை பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீட்டை சென்ற ஆண்டே நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
* கொரோனா காலகட்டத்தில் புதுச்சேரியில் 98% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை பெற்று வந்து இலவசமாக வழங்கினோம். ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துகொண்டோம்.
* கொரோனா காலகட்டத்தில் முழு அடைப்பை செயல்படுத்தாமல் பாதுகாப்போடு வெளியில் செல்வதற்கு தகுந்தவாறு எற்பாடு செய்து வழிபாட்டுத் தலங்களையும் திறந்து வைத்து நிதி ஆதாரங்களையும் பாதுகாத்தோம்.
* மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் எந்தவித ஆரவாரமின்றி ஆர்ப்பாட்டமின்றி சென்ற வருடமே வழங்க ஆரம்பித்துவிட்டோம்.
* அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை போர்டுகள் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் கல்வி கற்கும் முறைகளை மேம்படுத்தியிருக்கிறோம்.
* பெண் குழந்தைகளுக்கு ரூபாய் 50.000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
* 50க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் வாங்கப்பட்டு மக்கள் சேவைக்கு தொடங்கி வைத்திருக்கிறோம்.
* புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைக்கால பட்ஜெட் இல்லாமல் முழு நேர பட்ஜெட் சமர்ப்பித்து சாதனை படைத்திருக்கிறோம்.
* புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக தமிழில் பதவி ஏற்றுக்கொண்டதோடு தமிழ்மொழியிலேயே ஆளுநர் உரையையும் நிகழ்த்தி இருக்கிறேன்.
* மூன்று மாத கால ஆளுநர் ஆட்சி காலத்தில் 1 ரூபாய்க்கு மாஸ்க், 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி மக்களை பாதுகாத்திருக்கிறோம்.
* சாலை மேம்பாடு, விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பித்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சுற்றுலா வசதிகளை மேம்படுத்தி கொடுத்தது.
* புதுச்சேரிக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் மத்திய அரசுக்கு தெரிவித்து போதிய நிதி ஆதாரங்களை பெற்றுத் தந்தது.
* புதுச்சேரி மாடல் என்ற சொல்லும் அளவிற்கு சமூக நல மக்கள் பணியில் முன்னெடுத்துச் சென்ற முதல்வருக்கு துணை நின்ற முன்னாள் துணை நிலை ஆளுநர் என்ற முறையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
* புதுச்சேரி துணை ஆளுநர் மாளிகை என்பது மக்கள் அலுவலமாக மாற்றப்பட்டு மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பல குறைகளை நிறைவேற்றியுள்ளோம்.
* புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஏழை, எளிய மக்களின் குறைகளை சொல்ல கதவுகள் எப்போதும் திறந்து இருந்தது.
* மூன்று ஆண்டுகளில் பல மன நிறைவான மக்கள்நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* மாண்புமிகு பாரதப் பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
* மாண்புமிகு பாரதப் பிரதமரின் மக்கள் மலிவு மருந்தகத்தை செயல்படுத்தியது.
* புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் போன்ற பகுதிகளுக்குச் சென்று பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய மனநிறைவோடு உங்களின் மூன்று ஆண்டுகள் மக்கள் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post புதுச்சேரி முதலமைச்சராக 4ம் ஆண்டு மக்கள் பணிகளை தொடங்கிய ரங்கசாமிக்கு தமிழிசை வாழ்த்து..!! appeared first on Dinakaran.