×
Saravana Stores

நீட் தேர்வே இருக்க கூடாது: கார்த்தி சிதம்பரம் பேட்டி

பழநி: நீட் தேர்வே இருக்கக்கூடாது. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநி, தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்த பின், கார்த்தி சிதம்பரம், நிருபர்களிடம் தெரிவித்ததாவது: கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு தரும்.

நீட் தேர்வின்போது மாணவ, மாணவிகள் அலைக்கழிக்கப்படுவதும், தாமதமாக வருவதாக கூறி அனுமதிக்க மறுப்பதும், மத்திய தேர்வு ஆணையத்தின் முடிவு. நீட் தேர்வு என்பதே இருக்க கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு. இயந்திர வாக்குப்பதிவில் எதிர்க்கட்சிகளுக்கு எழுந்துள்ள சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும். இதற்கு சில வாக்குச்சாவடிகளில் விவிபேடுகளை மட்டும் எண்ணுவதை விட, அனைத்து தொகுதிகளிலும் உள்ள விவிபேடு வாக்குகளை எண்ணினால் எதிர்க்கட்சிகளின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்.

The post நீட் தேர்வே இருக்க கூடாது: கார்த்தி சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karti Chidambaram ,Palani ,Karthi Chidambaram ,Congress ,Tamil Nadu government ,Meghadatu ,Thandayuthapani Swamy hill temple ,Palani, Dindigul district ,
× RELATED பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை