×
Saravana Stores

கச்சத்தீவு விவகாரத்தை பெரிதுபடுத்தும் பாஜக மீது வழக்கு தொடர காங். முடிவு..!!

சென்னை: கச்சத்தீவு விவகாரத்தை பெரிதுபடுத்தும் பா.ஜ.க. செய்த முறைகேடுகள் குறித்து நீதிமன்றத்தில் முறையிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு 3 வாரம் முன்பு கச்சத்தீவு குறித்த ஆவணங்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்டதாக கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது. மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் கச்சத்தீவு பற்றி பிரச்சாரத்தில் பேசினர். கச்சத்தீவு குறித்து பொய் பிரச்சாரம் செய்த மோடி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post கச்சத்தீவு விவகாரத்தை பெரிதுபடுத்தும் பாஜக மீது வழக்கு தொடர காங். முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Chennai ,Tamil Nadu ,Annamalai ,RTI ,
× RELATED பிரியங்கா காந்தியின் வெற்றிக்காக...