×
Saravana Stores

தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது. ஏப்.30-ம் தேதி வரை மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். வேலைவாய்ப்புக்காக ஆண்கள் 24,74,985 பேரும், பெண்கள் 28,98,847 பேரும், 3-ம் பாலினத்தவர் 284 பேரும் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 பேர் ஆகும்.

* 30.04.2024-ன்படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களது வயது வாரியான விவரங்கள்

18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 10,69,609 பேரும் 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 23,62,129 பேரும், 31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள்-16,94,518 பேரும், 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2,40,537 பேரும், 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 7,323 பேரும் உள்ளனர்.

* 30.04.2024-ன்படி மாற்றுத்திறனாளிப் பதிவுதாரர்களது விவரங்கள்

கை,கால் குறைபாடுடையோர் ஆண்கள் – 76,260 பேரும், பெண்கள் – 39,222 பேரும் மொத்தம் – 1,15,482 பேரும் உள்ளனர். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் ஆண்கள் – 9,586 பேரும், பெண்கள் – 4,582 பேரும், மொத்தம் 14,168 பேரும் உள்ளனர். விழிப்புலனிழந்தோர் ஆண்கள் 12,567, பெண்கள் – 5,766 பேரும், மொத்தம் 18,333 பேரும் உள்ளனர். அறிதிறன் குறைபாடு மற்றும் இதர குறைபாடு உள்ளானவர்கள் ஆண்கள் 1,375 பேரும் பெண்கள் 445 பேரும், மொத்தம் 1,820 உள்ளனர். மொத்தமாக 99,788 ஆண்கள், பெண்கள் 50,015 என மொத்தம் 1,49,803 பேர் உள்ளனர்.

* பட்ட படிப்புக்கு கீழ் உள்ளவர்களில் பத்தாம் வகுப்பிற்கு கீழ் 2,29,410 பேர், பத்தாம் வகுப்பு 40,28,368, பன்னிரெண்டாம் வகுப்பு 27,85,920, பட்டய படிப்பு 2,65,078, இதர பட்டய படிப்பு 92,851, இடைநிலை ஆசிரியர்கள்-1,48,652, என்.டி.சி (ஐ.டி.ஐ) – 1,52,416, என்.எ.சி 64,416 பேரும் உள்ளனர்.

* பட்ட படிப்பில் உள்ளவர்கள் கலை 4,00,508; அறிவியல் 6,07,424; வணிகவியல் 3,02,333 ; பட்டதாரி ஆசிரியர்கள் 2,89,199; பொறியியல் 2,41,108; மருத்துவம் 1,346; வேளாண்மை 7,594; வேளாண்மை பொறியியல் 361; கால்நடை அறிவியல் 1,024; சட்டம் 1,882; இதர பட்ட படிப்பு 1,43,759 பேர் உள்ளனர்.

* முதுகலை பட்ட படிப்பு முடித்தவர்களில் கலை 1,44,522; அறிவியல் 1,74,887; வணிகவியல் 47,664; முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,12,231; பொறியியல் 2,09,788; மருத்துவம் 791; வேளாண்மை 436; வேளாண்மை பொறியியல் 8; கால்நடை அறிவியல் 97; சட்டம் 152; இதர பட்ட படிப்பு 1,81,301 பேர் உள்ளனர்.

The post தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Employment Department ,Tamil Nadu ,Chennai ,Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...