×
Saravana Stores

2 ஆயிரம் தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் லில்லியம் மலர்கள்

ஊட்டி : மலர் கண்காட்சிக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள லில்லியம் மலர்கள் பூத்து கண்காட்சிக்கு தயார் நிலையில் உள்ளது.
கோடை சீசனின் போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதேபோல், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக, ஆண்டு தோறும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, பூங்கா முழுவதிலும் பல வண்ணங்களில் பல வகையான மலர்கள் பூத்துக்குலுங்கும். இதேபோல், 45 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும்.

இந்த தொட்டிகள் மாடத்தில் பல வடிவங்களில் அடுக்கி வைக்கப்படும். இந்த மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். ஆண்டு தோறும் பூங்காவில் உள்ள மாடங்களில் கொய்மலரான லில்லியம் மலர் செடிகளும் வைக்கப்படுகிறது. இம்முறை இந்த லில்லியம் மலர் செடிகள் 2 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.

இவைகள் பூங்காவில் உள்ள மேல் பூங்கா நர்சரியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சிக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், தற்போது லில்லியம் செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகிறது. இளஞ்சிவப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக்குலுங்குகிறது. இன்று மாடங்களில் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த லில்லியம் மலர் அலங்காரத்தை பார்த்து ரசித்து செல்ல முடியும்.

The post 2 ஆயிரம் தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் லில்லியம் மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Government Botanical Garden ,
× RELATED கால்நடை வளர்க்கும் பகுதியாக மாறிய ஊட்டி நகராட்சி பூங்கா