×

உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசியை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. வணிக காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசிக்கான தேவை தற்போது சந்தையில் குறைந்துள்ளதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா திரிபுகளை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு விதமான மருந்துகள் தயாரிக்கப்பட்டதால், தற்போது மருந்துகள் சந்தையில் தேங்க தொடங்கியுள்ளன.

எனவே இனி புதியதாக மருந்துகள் உற்பத்தி செய்யப்படாது மற்றும் விநியோகமும் செய்யப்படாது. ஐரோப்பாவிற்குள் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான் சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை திரும்பப் பெறுகிறோம்” அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்ட் தடுப்பு மருந்தால் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) எனப்படும் இரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் கடந்த வாரம் ஒப்புக்கொண்டது. இது அந்த தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்ட, பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையிலும், முக்கிய பேசுபொருளானது. இந்த சூழலில் தான் தனது கொரோனா தடுப்பு மருந்துகளை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது.

The post உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Astragenica ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து