×
Saravana Stores

பெண் அடித்து கொலை? கண்மாயில் உடல் மீட்பு

 

சாத்தூர், மே 8: சாத்தூர் அருகே மாயமான பெண் கண்மாயில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாத்தூர் அருகே கே.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் நாராயணன் மனைவி கணபதி(55). மூன்று பிள்ளைகள் உள்ளனர். வீட்டில் இருந்த கணபதி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமனார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கே.மேட்டுப்பட்டி கண்மாயில் உடல் அழுகிய நிலையில் கணபதி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த இருக்கன்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து கண்மாய் தண்ணீரில் வீசி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். காணாமல் போன பெண் கண்மாயில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பெண் அடித்து கொலை? கண்மாயில் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chatur ,Narayanan ,Ganapathi ,K. Mettupatti ,Ganapati ,Kanmayil ,
× RELATED சாத்தூர் அருகே ஆட்டு தொழுவமான இ.சேவை மையம்