×

பிளஸ் 2 தேர்வில் மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

 

தாராபுரம், மே 8: பிளஸ் 2 பொதுத்தேர்வில் மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். அப்பள்ளியின் அறிவியல் பிரிவை சேர்ந்த மாணவி ரா.பிரியா 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். செ.கனிஷ்கா 575 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், ச.சன்மதி 574 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.

இந்த பள்ளியை சேர்ந்த தேர்வு எழுதிய 122 மாணவர்களில் 9 பேர் 560 மதிப்பெண்களுக்கு மேலும், 11 மாணவர்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 23 மாணவர்கள் 525 மதிப்பெண்களுக்கு மேலும், 41 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதோடு கணினி அறிவியலில் 2 பேர், கணினி பயன்பாடுகளில் ஒருவர், வணிகவியலில் 3 பேர், கணக்குப்பதிவியலில் ஒருவர், பொருளியல் ஒருவர் என மொத்தம் 8 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 2 மாணவர்கள் 2 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அந்த மாணவர்களையும், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் பி.செல்லமுத்து, பள்ளி செயலாளர் பி.எஸ். கிருஷ்ணகுமார், முதல்வர் எஸ்.பழனிச்சாமி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

 

The post பிளஸ் 2 தேர்வில் மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Mulanur Bharati Vidyalaya Matriculation School ,Tarapuram ,Moolanoor ,Bharati Vidyalaya Matric Higher Secondary School ,Ra. Priya ,S. Kanishka ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் இடைநிலை ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வில் 25 பேர் ஆப்சென்ட்