×

கண்மாய்க்குள் வாலிபர் தற்கொலை

 

தேவகோட்டை, மே 8: தேவகோட்டை அருகே வெளிமுத்தி கண்மாய்க்குள் மரத்தில் அடையாளம் தெரியாத 40 வயது வாலிபர் தூக்கில் தொங்கியபடி இருந்தார். தகவல் அறிந்த தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் உடலை கைப்பற்றி தேவகோட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடம்பாகுடியைச் சேர்ந்த அழகர் மகன் மகாலிங்கம் என தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருப்பூரில் வேலை பார்த்து வந்தவர் ஊருக்கு வந்த நிலையில், தற்கொலை செய்துள்ளார். குடும்பத்தில் பிரச்னையா அல்லது கடன் பிரச்னை காரணமா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கண்மாய்க்குள் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kanmai ,Devakottai ,Velamuthi Kanmai ,Devakottai taluk police ,Devakottai government hospital ,
× RELATED கண்மாயில் மீன் திருடியோர் மீது வழக்கு