×

அழகர்கோவிலில் வசந்த விழா மே 14ல் துவக்கம்

 

மதுரை, மே 8: மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா வரும் மே 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் விழா துவங்குகிறது. இதில் சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணியளவில் சுவாமி ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி ஆடி வீதி வழியே உலா வந்து, பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி சென்று பின்பு அங்கிருந்து வசந்த மண்டபம் திரும்புவார். மீண்டும் இரவு வந்த வழியாக இருப்பிடம் சென்று சேர்கிறார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர், கோயில் நிர்வாகத்தினர், அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post அழகர்கோவிலில் வசந்த விழா மே 14ல் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Alaghar temple ,Madurai ,Vaikasi Vasant Utsava festival ,Kalazhagar Temple ,Alagharkovil ,Scorpio Ascendant ,Sundararaja ,Alaghar ,
× RELATED வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி