- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழு
- தீபக் ஜேக்கப்
- ஜலசூத்திரம்
- ஹெரிடேஜ் வாக் இன்
- தின மலர்
தஞ்சாவூர், மே 8: தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் மாவட்ட தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் மாதம் தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மரபு நடைப்பயணம் நடைபெற்று வருகி து. இந்த வாரம் ‘ஜலசூத்ரா’ எனப்படும் 17ம் நூற்றாண்டின் நகர நீர்வடிகால் மற்றும் மேலாண்மை குறித்த மரபு நடைப்பயணம் தஞ்சாவூர் சிறிய கோட்டை அருகே சேவப்ப நாயக்கன் ஏரியில் துவங்கி பெரியகோட்டை கொடிமரத்து மூலை அருகே அகழி வடகிழக்கு கரை வரை ‘வே’ – மரபு ஆய்வறிவமைப்பினரோடு இணைந்து நடத்தப்பட்டது.இந்த மரபுநடைப் பயணத்தில் செவப்பநாயக்கன் ஏரி, சிவகங்கைக் குளம், அய்யன்குளம், ஹரிபண்டிதர் குளம், சாமந்தான்குளம், அரண்மனை கிருஷ்ண விலாச குளம், மங்காகுளம், பழமையான கேணிகள் மற்றும் அகழி ஆகிய இடங்கள் சென்று பார்க்கப்பட்டது.
இந்த மரபுநடைப் பயணத்தைக் கட்டிட வடிவியலாளர் நாவளவன் மற்றும் வேளாண் ஆலோசகர் பழனியப்பன் ஆகியோர் வழி நடத்தி சோழர் காலம் முதல் தற்போதைய காலம் வரையிலான தஞ்சாவூர் நகர நீர் மேலாண்மை மற்றும் நீர் வடிகால் சிறப்புகளை எடுத்துக் கூறினர்.இந்த நடைப்பயணத்தில் தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் நகரின் பண்டைய நீர் மேலாண்மை பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டதாகவும் அதனைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் நடைப்பயணத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களது வீடுகளின் மேல்பகுதி, மாடி, பால்கனி, முற்றத்தின் மேல்பகுதிகளில் பறவைகளுக்காக ஒரு சிறிய பாத்திரத்தில் அல்லது கப்பில் தயவுசெய்து தண்ணீர் வையுங்கள்.
The post தஞ்சாவூரில் மரபு நடைப்பயணம் appeared first on Dinakaran.