- நெடுங்குடி
- பெரியநாயக்க அம்மன் கோயில்
- Arimalam
- புதுக்கோட்டை மாவட்டம்
- நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை திருவிழா
- நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில்
- சித்திரை தெரோட்டம்
திருமயம்,மே8: அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடத்த 6ம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற விழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் நடைபெற்றது. இதனிடையே நேற்று மூன்றாம் திருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக தேர் திருவிழாவிற்காக நெடுங்குடி கைலாசநாதர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பெரியநாயகி அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது நெடுங்குடி உதிரிகாரர் தெரு, நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு தேரடியை வந்து அடைந்தது. தேர் சென்ற வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
The post அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் appeared first on Dinakaran.