×
Saravana Stores

வள்ளலார் மையத்தில் தொல்லியல் துறை ஆய்வு

வடலூர்: வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் விழுப்புரத்தை சேர்ந்த தமிழ்வேங்கை, கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த வினோத் ராகவேந்திரன் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் இடத்தை தொல்லியல் துறை குழு அமைத்து ஆய்வு செய்து மே 10ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யும்படி தொல்லியல் துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் டாக்டர் சிவானந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post வள்ளலார் மையத்தில் தொல்லியல் துறை ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vallalar Centre ,Vadalur ,Villupuram ,Vinod Raghavendran ,Tirupathripuliyur ,Cuddalore ,Madras High Court ,Vallalar International Centre ,Vadalur Vallalar International Center ,
× RELATED வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது