×
Saravana Stores

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரர்கள்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் மேலசேத்தியை சேர்ந்தவர் செல்லப்பா. விவசாயி. இவரது மனைவி சவிதா. இவர்களது மகன்கள் நிர்மல், நிகில். இரட்டையர்களான இவர்கள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தனர். இந்நிலையில் பிளஸ் 2 பொது தேர்வு எழுதியிருந்த நிலையில் நேற்று முன்தினம் ரிசல்ட் வெளியானது.

இதில், கணக்கு பாடப்பிரிவு எடுத்து படித்த இரட்டையர்கள் இருவரும், 600க்கு 478 மதிப்பெண்கள் பெற்றனர். இதில் நிகில் தமிழில் 96, ஆங்கிலம் 87, இயற்பியல் 78, வேதியியல் 84, உயிரியல் 66, கணிதம் 67, இதே போல் நிர்மல் தமிழில் 95, ஆங்கிலம் 78, இயற்பியல் 76, வேதியியல் 69, உயிரியல் 87, கணிதம் 73 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் உருவத்திலும், செயலிலும் ஒன்றாக செயல்படுவர் என்பது பொதுவான கருத்து. அதனை நிரூபிக்கும் வகையில் இந்த இரட்டை சகோதரர்கள் பிளஸ் 2வில் ஒரே மதிப்பெண் எடுத்ததால் மகிழ்ச்சியில் உள்ளனர். இருவரும், இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐஏஎஸ் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இரட்டை சகோதரர்களை பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரர்கள் appeared first on Dinakaran.

Tags : Chellappa ,Vedaranyam ,Panchanadikulam ,Melasethi ,Nagapattinam ,Savita ,Nirmal ,Nikhil ,
× RELATED தகட்டூர் சார்பதிவாளர்...