×
Saravana Stores

வெப்பத்தின் தாக்கம் எதிரொலி: எஸ்பி உத்தரவின் பேரில் சிக்னல்களில் நிழல் தரும் பந்தல்கள்

பெரம்பலூர்,மே8: வெப்பத்தின் தாக்கம் எதிரொலியாக பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில்,பெரம்பலூர் நகரில் உள்ள சிக்னல்களில் நிழல் தரும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருப்பதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவில் நடப்பாண்டு வெப்பத்தின் தாக்கம்அதிகரித்து சாலைகளில் தெருக்களில் அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்க ளும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் பெரிதும் திண் டாடி வருகின்றனர். பெரம்ப லூர் மாவட்ட அளவில் வெப்பத்தை சமாளிக்க 20 இடங்களில் பொதுமக்க ளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை பெரம் பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் நடவடிக்கை எடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி ஏற்கனவே உச்சி வெயிலில், சாலை நடுவே நின்று போக்குவரத்தை சீரமைக்கும் டிராபிக் போலீ சாருக்குகுளிர்பானங்களை வழங்க ஏற்பாடு செய்துள் ளார்.

திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பாகவும், துளிகள் அறக்கட்டளை சார்பாகவும் பொதுமக்கள் நலனுக்காக பெரம்பலூர் நகரில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர் நகராட்சி நிர் வாகம் சார்பாக பஸ்டாண்டு களில் பொதுமக்கள் குடிநீர் வசதிக்காக கூடுதலாக தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார் பாக போக்குவரத்து சிக் னல்களில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் 30நொடிகள் முதல் 60 நொடிகள் வரை காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் வெப் பத்தை சமாளிக்க ஏதுவாக போக்குவரத்து சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி பெரம்பலூர் நக ரின் பிரதான சிக்னலான பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் பழைய பஸ் டாண்டு- எளம்பலூர் சாலை களை இணைக்கும் காமரா ஜர் வளைவு சிக்னல் பகுதி யில் மேற்கு,

தெற்கு, கிழக்கு ஆகிய 3 திசைக ளில் காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ரெட் சிக்னல் விழுந்தவுடன் நிழல் பந்தலுக்கு கீழே காத்திருந்து, பின்னர் கிரீன் சிக்னல் விழுந்தவுடன் புறப் பட்டுச் செல்ல ஏதுவாக பந் தல் வசதி அமைக்கப் பட்டுள்ளது. இதே பந்தல் கள் இன்று ரோவர் வளைவு பகுதியில் மேற்கு, கிழக்கு இரு பகுதி களிலும் அமைக்கப்படுகி றது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக எஸ்பி ஷ்யாம்ளா தேவி பொதுப்பணித்துறை உதவியுடன் மேற்கொண் டுள்ள இந்த நடவடிக்கை க்கு பெரம்பலூர் மாவட்ட இரு சக்கர வாகன ஓட்டி கள், பொதுமக்கள் மாவட்ட காவல் துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

The post வெப்பத்தின் தாக்கம் எதிரொலி: எஸ்பி உத்தரவின் பேரில் சிக்னல்களில் நிழல் தரும் பந்தல்கள் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur District ,SP ,Shyamla Devi ,Dinakaran ,
× RELATED நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர்...