×
Saravana Stores

ராமதாஸ் வலியுறுத்தல் மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக்க வேண்டும்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுக்க மரங்களை அதிக எண்ணிக்கையில் நட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக்கோயில் வளாகத்தில் இரு மாதங்களில் 7,700 மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியது வனத்துறை தான். இதற்காக நன்றி. இதேபோல் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் மரக்கன்றுகளை லட்சக்கணக்கில் நடுவதற்கு தமிழக வனத்துறை முயற்சி எடுக்க வேண்டும்.

இதன் மூலம் கோடைக்கால வெப்ப நிலையில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும். மேலும், கட்டிடங்களுக்குள் தேவைப்படும் குளிர்சாதனத் தேவையில் 30 சதவீதத்தை குறைக்க முடியும். இந்த உன்னத நிலையை அடைய அரசும், மக்களும், சமூக அமைப்புகளும் போட்டிப்போட்டு மரங்களை வளர்க்கத் தொடங்குவோம். மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்றுவோம். அடுத்த பத்தாண்டிலாவது இதமான வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த உறுதியேற்போம்.

The post ராமதாஸ் வலியுறுத்தல் மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,Pamaga ,Tamil Nadu ,Vidyikakoil ,Konerikkuppam ,Tindivanam ,Ramadas ,
× RELATED கால்பந்து திடல்களை தனியாரிடம்...