- திமுக அரசு
- அண்ணா, களையனார் நினைவு
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- அண்ணா, கலைனர் நினைவு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அண்ணா
- காளினார்
சென்னை: திமுக அரசு பொறுப்பேற்று 4ம் ஆண்டு தொடங்குவதையொட்டி அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மே 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையும் பொறுப்பு ஏற்றது.
அதன்பின்னர், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றும் பணி தொடங்கியது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, 1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்று (செவ்வாய்க்கிழமை) 4ம் ஆண்டு தொடங்கியது.
இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்பி ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல,முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் க.முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், மனோ தங்கராஜ், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும்,தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர்கள் எஸ்.ஆஸ்டின், தாயகம் கவி, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக முன்னோடிகள், நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
The post திமுக அரசு பொறுப்பேற்று 4ம் ஆண்டு தொடக்கம் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் appeared first on Dinakaran.