×
Saravana Stores

காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

ஆறுமுகநேரி,மே 8: காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2023-24ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ- மாணவிகள் 29 பேரும் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். மாணவர் முகமது அபுபக்கர் சித்திக் 576 மதிப்பெண்கள், மாணவி நூப்ஹா 570 மதிப்பெண்கள், மாணவர் முகமது இப்ராஹிம் 563 மதிப்பெண்கள் பெற்று முறையே முதல் 3 இடங்களை வென்றனர். இதையடுத்து சாதனை படைத்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் முகமது சம்சுதீன் தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில் பாராட்டு விழா நடந்தது.இதில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

The post காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Gayalpatnam ,Aarumuganeri ,Kayalpatnam Mukaideen ,Kaialpatnam Mukaideen Metric Secondary School ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் அரிவாள், வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட 2 பேர் கைது