×

இளம்பெண் மாயம்

சாத்தான்குளம், மே 8: சாத்தான்குளம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சாத்தான்குளம் அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் சீனிவாசன் (36). மோட்டார் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ராசாத்தி (23). கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், மனைவி ராசாத்தியின் செல்போனை சேதப்படுத்தினாராம். இதனால் விரக்தியில் இருந்துவந்த ராசாத்தி திடீரென மாயமானார். பின்னர் இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் எஸ்ஐ சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

The post இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Murugan ,Srinivasan ,Manickam ,Rasathi ,
× RELATED மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை