×
Saravana Stores

ஹாசன் மட்டும் இன்றி பெங்களூரு, மைசூரு என 25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம்: டி.கே.சிவகுமார் மீது குமாரசாமி குற்றச்சாட்டு


பெங்களூரு: ஹாசன் மட்டும் இன்றி பெங்களூரு, மைசூரு என 25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் டி.கே.சிவகுமார் இருக்கிறார் என முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சுமத்தினார். பெங்களூருவிலுள்ள ஜேபி பவனில் மஜத தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது: ‘பிரஜ்வல் ரேவண்ணா, எனது மகன் என கூறினேன். அதை நான் மறுக்கவில்லை. அதே நேரம் பிரஜ்வலுக்கு எதிராக பென்டிரைவ் புகார் இருப்பதாக பாஜ தலைவர்களுக்கு கடிதம் எழுதப்பட்ட விவகாரம் எதுவும் தெரியாது. டிசம்பர் மாதம் எழுதப்பட்ட அந்த கடிதத்தை எனக்கு அனுப்பி இருந்தால், பிரஜ்வலுக்கு டிக்கெட் கொடுத்து இருக்க மாட்டோம்.

பிரஜ்வல் ரேவண்ணா, பென்டிரைவ் வெளியான விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் சதி நடந்துள்ளது. ஹாசனில் மட்டும் இன்றி மைசூரு, பெங்களூரு என மாநிலம் முழுவதும்25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளார். மாநில அரசின் விசாரணை சரியான திசையில் நடைபெறுவதாக தெரியவில்லை. மாநில அரசின் எஸ்.ஐ.டி. விசாரணை முறையாக நடக்கவில்லை. எஸ்.ஐ.டி., என்பது சிவகுமார் விசாரணை குழுவாக செயல்படுகிறது. எனவே, இந்த வழக்கை நீதிபதிகள் கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

The post ஹாசன் மட்டும் இன்றி பெங்களூரு, மைசூரு என 25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம்: டி.கே.சிவகுமார் மீது குமாரசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Pendrive ,Bengaluru, Mysore ,Hassan ,D. K. Kumarasamy ,Shivakumar ,BANGALORE ,BANGALORE, MYSORE ,D. K. ,Kumarasamy ,Majata ,Dinakaran ,
× RELATED இடைத்தேர்தல் நடைபெறும்...