×
Saravana Stores

கட்டுகட்டாக ரூ37 கோடி பறிமுதல்; அமைச்சரின் செயலாளர், வீட்டு வேலைக்காரர் கைது


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக காங்கிரசின் ஆலம்கிர் ஆலம் பதவி வகிக்கிறார். இவரது துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது தொடர்பாக முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திரகுமார் ராம் என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். வாக்குமூலத்தில் அவர் கூறிய விஷயங்களை தொடர்ந்து, அமைச்சரின் தனி செயலாளர் (பிஏ) சஞ்சீவ் லாலின் வீட்டு வேலைக்காரர் ஜஹாங்கீர் ஆலமுக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை செய்தனர். ராஞ்சி கதிகானா சவுக்கில் உள்ள இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுகட்டாக ரூ.32 கோடிக்கு மேல் சிக்கின.

நேற்று மேலும் 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ரூ.4.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 2 நாள் சோதனையில் ரூ.36.75 கோடி பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனி செயலாளர் சஞ்சீவ் லால் மற்றும் வேலைக்காரர் ஜஹாங்கீர் ஆலமிடம் நேற்று முன்தினம் இரவு முதல் அமலாக்கத்துறை விசாரித்து, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் இருவரையும் நேற்று கைது செய்தது. அவர்கள் இருவருமே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை எனவும் அமலாக்கத்துறை கூறி உள்ளது.

The post கட்டுகட்டாக ரூ37 கோடி பறிமுதல்; அமைச்சரின் செயலாளர், வீட்டு வேலைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Ranchi ,Congress ,Alamgir Alam ,Minister ,Jharkhand ,Former ,Chief Engineer ,Virendra Kumar Ram ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்டில் ஆர்ஜேடி தனித்து போட்டி?