×

195 கிலோ கஞ்சா அழிப்பு

ஆவடி: ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தலை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் மாநகர ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 61 கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் இருந்து 195 கிலோ, 425 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்படி கஞ்சாவை ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் எஸ்.ராஜேந்திரன், ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் ஐமன் ஜமால் மற்றும் தடய அறிவியல் இயக்குநர் அன்வர்சித்திக் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் என்ற இடத்தில் தனியார் நிறுவனத்தில் உள்ள இன்சுலேட்டரில் எரித்து அழித்தனர்.

The post 195 கிலோ கஞ்சா அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Aavadi Police ,Municipal ,Commissioner ,Shankar ,Ganja ,Gutka ,Aavadi Police Commissionerate ,Aavadi Police Commission ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டாபிராம் அருகே வைக்கோல்...