×
Saravana Stores

என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்: சோனியா காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: எந்த விலையை தந்தாவது அதிகாரத்தை கைப்பற்ற மோடியும் பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது என்று சோனியா காந்தி விமர்சனம் செய்துள்ளார். தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்கக் கோரி காங். மூத்த தலைவர் சோனியாகாந்தி எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தியில், நாட்டில் இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன.

வேலையின்மை, பெண் கொடுமை, பாகுபாடுகள் பாஜக மற்றும் மோடியின் நோக்கத்தால் ஏற்பட்டவை. அரசியல் ஆதாயங்களுக்காக பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் வெறுப்புணர்வை வளர்த்து வருகின்றனர். என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி, அனைவருக்கும் முன்னேற்றம், நாட்டை வலுப்படுத்த எப்போதும் காங்கிரஸ் போராடும்.

ஏழைகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் விளிம்பு நிலை சமூகத்தினருக்கு வலுசேர்க்க காங்கிரஸ் வாக்குறுதி தந்துள்ளது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார்.

The post என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்: சோனியா காந்தி கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Sonia Gandhi ,Delhi ,Modi ,Congress ,X ,
× RELATED வயநாட்டில் சோனியா காந்தி ரோட் ஷோ