×

பனீர் கபாப்

தேவையானவை:

வாழைக்காய் – ஒன்று
துருவிய பனீர் – ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு – கால் கப்
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி – 4 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது)
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாழைக்காயை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். இதனுடன் துருவிய பனீர், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, இஞ்சித் துருவல், பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சில சொட்டுகள் தண்ணீர் சேர்க்கலாம்). பிசைந்த கலவையை விரல் நீள வடிவில் அல்லது விருப்பப்பட்ட வடிவில் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி செய்து வைத்ததை பொரித்தெடுத்தால் சுவையான பனீர் கபாப் தயார்.

The post பனீர் கபாப் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED மின் பழுதை சரி செய்யும்போது ஊழியர்கள்...