×

பனீர் புலாவ்


தேவையானவை:

பனீர் – 250 கிராம்
உதிரியாக வடித்த சாதம் – 2 கப்
தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று (நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் தலா – 2
பிரியாணி இலை – ஒன்று
பச்சை மிளகாய் – 4
நெய் – ஒரு டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பிறகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். பனீர் துண்டுகளை சதுரமாக வெட்டிச் சேர்க்கவும். கலவை சேர்ந்து வரும்போது சாதத்தை சேர்த்து, மிதமான தீயில் கிளறவும். கடைசியாக மீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான பனீர் புலாவ் ரெடி.

 

The post பனீர் புலாவ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED மின் பழுதை சரி செய்யும்போது ஊழியர்கள்...