சென்னை: 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இண்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. பல கட்ட போராட்டத்திற்கு பின் புரோட்டான் நிறுவனத்திடம் இருந்து ஐபி முகவரியை சென்னை காவல்துறை பெற்ற நிலையில் மீண்டும் சில தகவல்களை கேட்டு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த மெயில் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த மெயில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த புரோட்டான் நிறுவன மெயில் மூலம் இந்த மிரட்டல் வந்தது தெரியவந்துள்ளது. தற்போது யார் மூலமாக இந்த இ-மெயில் என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இ-மெயில் அனுப்பிய நபர் VPN மூலமாக இந்த இ-மெயில் அனுப்பபட்டுள்ளதால் இந்த விவகாரம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.
இருப்பினும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஐபி முகவரியை பெற்று மத்தி குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் VPN-ஐ பயன்படுத்தி யார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து என்பது தொடர்பாக பலகட்ட போராட்டத்திற்கு பிறகு இண்டர்போல் மூலமாக புரோட்டன் நிறுவனத்திடம் இருந்து ஐபி முகவரியை பெற்றுள்ளனர்.
அந்த ஐபி முகவரியானது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்ட 2 மணி நேரத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த ஐபி முகவரியை பயண்படுத்தியிருப்பது தெரியவந்ததை அடுத்து மிரட்டல் விடுத்த நபரின் முகவரியை கண்டுபிடிப்பது மத்திய குற்றபிரிவு போலீஸ்க்கு சவாலாக இருந்து வருவதால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்ட 30 நிமிடத்தில் எத்தணை நபர்கள் மெயிலை பயன்படுத்தினர் என்ற விபரத்தை கேட்டு மீண்டும் இண்டர்போல் மூலமாக புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. மிரட்டல் விடுக்கபட்ட 30 நிமிடத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் அந்த நிறுவன மெயிலை பயன்படுத்தியிருப்பதால் அவர்களின் ஐபி முகவரியை தரும்படி சென்னை காவல்துறை எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்: இண்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் appeared first on Dinakaran.