ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே கடலில் மாயமான இளைஞரை, முத்துக்குளிக்கும் நபர்கள் தீவிரமாக தேடி வரும் நிலையில் படகு மூலமும் மீனவர்கள் தேடி வருகின்றனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் குந்துகால் மீன்பிடி துறைமுகத்தை சுற்றி பார்த்துவிட்டு கடலுக்குள் குளித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் முகமது முஜாதீன் என்ற இளைஞர் கடலின் ஆழமான இடத்திற்கு சென்றதையடுத்து அவர் மாயமானார். அவருடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் மாயமான நபரை தீவிரமாக தேடியும் அவர் கிடைக்காததால் அப்பகுதி மீனவர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மீனவர்கள் அப்பகுதியில் உள்ள முத்துக்குளிக்கும் நபர்களை வரவழைத்து மாயமான இளைஞரை தேடிவருவதையடுத்து மீனவர்களும் படகுகள் மூலம் தேடி வருகின்றனர்.
இளைஞர் மாயமானதையடுத்து மீன்பிடி துறைமுகத்தில் இளைஞரின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் கூடியதால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. கடலில் மூழ்கியவர்களை மீட்பதற்கான அதிநவீன கருவிகளை கடலோர காவல்துறையினர் பயன்படுத்த வேண்டும் என மாயமான இளைஞரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ராமேஸ்வரம் அருகே குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்! appeared first on Dinakaran.