×

ஐபிஎல் 2024: சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 9ம் தேதி தொடங்குகிறது

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12ம் தேதி நடைபெறும் சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 9ம் தேதி தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் பிளேஃஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் அதிரடியான வெளிப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் மே 12ம் தேதி சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் 61வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்தான அறிவிப்பை சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 9ம் தேதி காலை 10.10 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி, 5ல் தோல்வியுடன் புளிப்பாட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

10 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்து கிட்டத்தட்ட பிளேஃஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி எஞ்சியுள்ள போட்டிகளில் வேற்று பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளதால் இனி வரும் போட்டிகளில் சென்னை அணியின் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

The post ஐபிஎல் 2024: சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 9ம் தேதி தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : IPL 2024 ,Chennai ,Rajasthan ,IPL ,Chepakkam Stadium ,Dinakaran ,
× RELATED ஆர்சிபி அணியின் பேட்டிங்...