சோளிங்கர் : சோளிங்கர் அரசு மருத்துவமனையில் ஒரு குரங்கு 1 லிட்டர் பாட்டில் தண்ணீர் குடித்து தனது தாகத்தை தீர்த்து ெகாண்டது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் கடந்த சில தினங்களாக 106 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் காணப்படுகின்றது.
இந்த வெயிலை சமாளிக்க மண்பானை குடிநீர், தர்பூசணி, பழங்கள் ஜூஸ், மோர்பந்தல், வெள்ளரிக்காய், இளநீர் என பலரும் வெயிலுக்கேற்ற உணவு வகைகளை தேடி செல்கின்றனர். மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் விலங்குகளுக்கு சொல்லவா வேண்டும். சோளிங்கர் அரசு மருத்துவமனை வளாகத்தில் வாட்டி வதைத்த வெயிலால் தண்ணீர் தேடி சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று தாகத்தை தணித்துக் கொள்ள மருத்துவமனைக்கு வந்த ஒருவரின் பையில் வைத்திருந்த 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலை எடுத்து தாகம் தீரும் வரை குடித்து குரங்கு தாகத்தை தீர்த்துக்கொண்டது.
எனவே பொதுமக்கள் ஆங்காங்கே தங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளை பாதுகாக்க சிறு சிறு பாத்திரங்களில் தண்ணீர் வைத்தால் தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள் கோடை வெப்பத்தை தணிக்க உதவும் என வனவிலங்குகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
The post சோளிங்கர் அரசு மருத்துவமனையில் 1 லிட்டர் பாட்டில் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக் கொண்ட குரங்கு appeared first on Dinakaran.