*தமிழக அரசுக்கு மக்கள் நன்றி
காரியாபட்டி : காரியாபட்டி கரிசல்குளம் சாலை பராமரிப்பு பணிகள் செய்து கொடுத்த தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட கிராமம் கே.கரிசல்குளம். காரியாபட்டி தூத்துக்குடி மெயின் சாலையிலிருந்து கரிசல்குளம் செல்வதற்கு சாலை வசதி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கரிசல்குளம் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் கரிசல்குளம் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் மதுரை – பெரியார் பஸ்நிலையத்திலிருந்து கரிசல்குளத்திற்கு அரசு பஸ் இயங்கி வந்தது.
சாலை மிகவும் மோசமாக இருந்ததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எனவே கரிசல்குளம் சாலையை பராமரிப்பு செய்ய வேண்டும் என கிராமமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து பேரூராட்சி தலைவர் செந்தில் நிதியமைச்சர் தங்கம்தென்னரசுவின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதன் பிறகு மக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் தங்கம்தென்னரசு, சாலை பராமரிப்புக்கு ரூ.1 கோடியே 53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
தற்போது கரிசல்குளம் சாலை புதுப்பிக்கும் பணி முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதுவிட்டது. சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசுக்கும் மற்றும் திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
The post ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை appeared first on Dinakaran.