×
Saravana Stores

அமெரிக்காவை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம்: சென்னையில் அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை

சென்னை: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அத்தகைய மாணவர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவ்வாறு நடைபெற்று வரும் தாக்குதலை கண்டிக்கும் வகையில் இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

அந்த வகையில் சென்னை ஜெமினி பாலத்திற்கு அருகே இருக்கக்கூடிய அமெரிக்க துணை தூதரகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பது செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்திற்காக 25ம் மேற்பட்ட இந்திய மாணவர் சங்க கூட்டமைப்பினர் திரண்டுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயற்சி மேற்கொள்ளும் போது தொடர்ந்து மாணவர்கள் அங்கு தர்ணா போராட்டத்தை மேற்கொண்டதோடு சிலர் தடையை மீறி முற்றுகை போராட்டம் மேற்கொள்வதற்கான முயற்சியை மேற்கொண்டனர். இதனால் குண்டுக்கட்டாக போலீசார் அவர்களை தூக்கி கைது செய்யக்கூடிய முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக போலிசாருடைய வாகனத்தில் கைது செய்து வைத்துள்ளனர். அவர்களுடைய 3 முக்கிய கோரிக்கை என்பது பாலஸ்தீனத்திற்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்து வரக்கூடிய நிலையில் இதற்கு பல்வேறு விதமான எதிர்ப்பு வெளிக்கொண்டுள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய மாணவர்கள் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை கண்டிக்கும் விதமாக இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

The post அமெரிக்காவை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம்: சென்னையில் அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Indian Students' Union ,America ,US consulate ,Chennai ,Indian Students Union ,US ,Palestine ,consulate ,
× RELATED சொல்லிட்டாங்க…