- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிகள்
- கோபி?. திருக்குறள்
- முன்னாள் அமைச்சர்
- கே.சி கருப்பனன்
- ஓடகுதிர்
- கோபி, ஈரோடு மாவட்டம்
கோபி : கோபி அருகே ஒத்தகுதிரையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் படிக்கும் 603 மாணவ-மாணவிகளுக்கு ஒரே நேரத்தில் பணி நியமன ஆணைகளை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஒத்த குருவி செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொரியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் டெக்மகேந்திரா, ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ், அல்செக் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களை சேர்ந்த மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் நேர்முகத்தேர்வு நடத்தினர்.
இதில் 603 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். வேலை வாய்ப்புக்காக தேர்வு செய்யப்பட்ட 600 மாணவ, மாணவியருக்கும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் கல்வி நிறுவனங்களின் தலைவர் வெங்கடாசலம், கல்லூரி இணைச்செயலாளர் ஜி.பி.கெட்டிமுத்து, கல்லூரி முதன்மை நிர்வாக அலுவலர் கவுதம் ஆகியோர் தலைமையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் தங்கவேல், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளரும் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொறியியல் கல்லூரியை சேர்ந்த 123 மாணவர்களுக்கும் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 113 மாணவர்களுக்கும் கலை அறிவியல் கல்லூரி சேர்ந்த 367 மாணவர்கள் உட்பட 603 மாணவ, மாணவிகளுக்கும் பணி நியமன ஆணை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஆல்செக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூத்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுரேந்தர், டெக் மகேந்திரா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி திவ்யா, ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மனித மேம்பாட்டு அதிகாரி பிரவீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி அறங்காவலர் கவியரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரகதீஸ்வரன் கல்லூரியின் அருண்ராஜா துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மாண மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட பணி நியமன ஆணை பெற்ற மாணவர்கள் வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக கிடைக்க உள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் பேசும்போது, ‘‘ஒவ்வொரு மாணவர்களும் பெற்றோர்களை மதிக்க வேண்டும்.
பெற்றோர்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தி தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதால் கல்லூரி படிப்பை முடித்து தற்பொழுது வேலையில் சேரப் போகும் மாணவ, மாணவிகள் வேலையை முழுமையாக கற்று அடுத்தடுத்த நிறுவனங்களில் உயர்ந்த பதவிக்கு செல்லும் வரை பொறுமையாக காத்திருந்து செயல்பட வேண்டும். பெற்றோர்களுக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்க்க வேண்டும்’’ என குறிப்பிட்டார்.
The post ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் படிக்கும் 603 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை; முன்னாள் அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.