பெய்ஜிங் : சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதால் சீன நுகர்வோர் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளனர். இதுவே உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களில் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவது தங்கம் தான். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் காஸாவில் நடக்கும் போர் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. மேலும் சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாலும் சீன மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளனர்.
சீன மக்கள் மட்டுமின்றி சீன மத்திய வங்கியும் தங்கத்தை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்கிறது.
சீனா கோல்டு அசோஷியேஷன் நாட்டில் தங்க நுகர்வு முந்தைய ஆண்டை விட முதல் காலாண்டில் 6% அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இது 1.1 ட்ரில்லியன் ஆக இருந்த அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த மார்ச்சில் 775 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்து இருப்பதாகவும் இதற்கு சீனாவின் தங்க முதலீடுகளே காரணம் என்றும் கூறப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி தற்போது சர்வதேச தங்கச் சந்தையில் சீனாவின் கைதான் மேலோங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
The post உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்.. தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன அரசும், அந்த நாட்டு மக்களும்!! appeared first on Dinakaran.