- நீலகிரி
- கோவா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
- அக்னி ஸ்டார்
- நீல்கிரி, கோவா
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது, ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் வட உள்மாவட்டங்களான சேலம், காஞ்சீபுரம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிலையில், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று முதல் மே 10ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை 4 டிகிரி முதல் 7 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசம் கூடும் என்பதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த சூழலில், வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம், தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மே 12-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.